×

தெர்மாகோல் மாஜி வெளிநாடு செல்லும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

‘‘தெர்மாகோல் இப்போது தேவைப்படாதே… எங்கே பார்த்தாலும் நீர் நிலைகள் நிரம்பி இருக்கே என்று விவரம் ெதரியமால் பேசினார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் மெடல் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சரை கைது செய்தபோது, கட்சி தலைமை பெரிதாக எந்த எதிர்ப்பைCef காட்டவில்லையாம். நிர்வாகிகளும் அமைதி காத்தார்களாம். இந்த சம்பவத்தை அசைப்போட்ட தென்மாவட்டத்தில் உள்ள பிற மாஜிக்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம். நமக்கும் இந்த நிலை வந்தால் யார் நம்மை காப்பாற்றுவார்கள் என்று கலங்கி போய் இருக்கிறார்களாம். நம்மளை, நாம்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்களாம். இதுல, தூங்கா நகரத்தை மையமாகக் கொண்டு அரசியல் செய்து வரும் இலை கட்சியின் இரு மாஜி அமைச்சர்களும் ரொம்பவே யோசனையில் மூழ்கி இருக்கிறார்களாம். இதில் தெர்மகோல் மாஜி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா செல்ல அனுமதி கேட்டாராம். ஆனால், வெளிநாட்டுக்கு போகக் கூடாது என்று அவரது ஆசைக்கு அணைக்கட்டி விட்டார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக அவரது சக அமைச்சர்கள் அப்போதைய இரட்டை தலைவர்கள் தலைமையில் அமெரிக்கா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் பறந்து, சென்று வந்தனர். தற்போது மாஜி மில்க் மந்திரி கைதுக்கு பிறகு… தெர்மகோல் பெரும் அச்சத்தில் இருக்கிறாராம். காரணம், நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் இவரது பெயரும் அடிபடுவதாக அவங்க கட்சியினரே பேசிக்கிறாங்க. இந்த பிரச்னை முடியும் வரையிலும் வெளிநாட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு என்ற முடிவுக்கு தெர்மாகோல் வந்திருக்கிறதாம். இதனால், தனது சொந்த செலவில், அடுத்த மாதம் ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறாராம். திடீரென இதற்கான பயணத்திட்டத்தை தயாரித்து வருகிறாராம். உண்மையிலேயே இது சுற்றுலா திட்டமா. அல்லது உள்குத்து ஏதாவது இருக்கா என்பதுதான் தூங்காநகரத்து இலைகட்சியினர் மத்தியில் பேச்சாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘சிறை அதிகாரிகளில் சிலர் ரேஷன் அரிசியில் கூட கை வைத்து கரன்சி பார்ப்பதை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சி ஆட்சிக்காலம் முதல் தமிழகத்தின் ஒரு சில சிறைகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து சிறைகளில் எப்போது வேணும்னாலும் ரெய்டு நடக்கலாம்னு தகவல் கசிந்தது. இதனால் அச்சமடைந்த வெயிலூர் மத்திய சிறை அதிகாரிகள், சிறைவாசிகளுக்கு வழங்காமல் பதுக்கி வச்சிருந்த ரேஷன் பொருட்களை அழிச்சிடுங்கன்னு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளாங்க. உடனடியாக சிறை காவலர்களும் முறைகேடாக பதுக்கிய ரேஷன் பொருட்கள சிறை வளாகத்தில் உள்ள கால்வாய் மற்றும் கிணத்துல கொட்டி வீணடிச்சிட்டாங்களாம்.இப்படி அழிச்ச ரேஷன் பொருட்களை விட அதிகாரிகளின் வீடுகளுக்கு பல மடங்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். இதுக்கு ஒத்துழைக்கும் சிறை காவலர்களும் அவங்க வீட்டுக்கு ரேஷன் பொருட்களை எடுத்துனு போய்டுறாங்களாம். அதுமட்டுமல்ல சிறைவாசிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வேலூரில் வாங்காமல், சென்னையில் உள்ள தனியார் கடையில் வாங்குறாங்களாம். அதுக்காக குறிப்பிட்ட தொகையும் கமிஷனாக சிறை அதிகாரிகளுக்கு போகுதாம். இப்படி சிறைவாசிகளின் நலனுக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தொகையை அதிகாரிகள் ஆட்டைய போட்டுள்ளார்களாம். கிணறு தோண்ட பூதம் கிளம்பியது என்ற கதையாக, வெயிலூர் மத்திய சிறை கிணத்துல தோண்டினா ரேஷன் பொருட்களை அதிகாரிகள் ஆட்டைய போட்ட பூதாகரமான விஷயம் கிளம்ப போகுதுன்னு சிறைத்துறையில் நேர்மையானவர்கள் மத்தியில பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நகர்ப்புற தேர்தலில் கதர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாமே, ஏனாம்…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘கொரோனா  பரவல் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட உள்ளாட்சி தேர்தல் பணிகளில்  கட்சியினர் தீவிரமாக இருக்காங்க. ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி  தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு  அரசியல் கட்சியினரிடம் இருப்பதே இதற்கு காரணம். இது எல்லாம் பழைய விஷயம்…  புது விஷயத்துக்க வருவோம். குமரி மேற்கு மாவட்டத்தில் அண்மையில் எம்.பி,  எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்ற கதர் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில்,  ‘அனைத்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வார்டு கமிட்டிகள் அமைக்க  வேண்டும், வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் பத்மநாபபுரம், குழித்துறை,  கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகளிலும், 2 பேரூராட்சிகளை தவிர்த்து மற்ற 22  பேரூராட்சிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துட்டாங்களாம்.  இவ்வளவு முடிவு செய்தவர்கள் அதற்கு பிறகு வைத்துள்ளதுதான் டிவிஸ்டாம்.  அதாவது, கீழ்மட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மேலிடத்திற்கு அனுப்பி…  மேலிடம் எடுப்பதே இறுதி முடிவு என்கிறது கதர் வட்டாராம். இதை ேகட்ட  தொண்டர்கள் அப்போது எதுக்கு இந்த கூட்டம் நாங்க சீட் கேட்டு சென்னைகே போய் டேரா போட்டிருப்போம் இல்லையா…நிர்வாகிகளை கேட்டாங்களாம்… அவர்கள்  மவுனத்தையே பதிலாக சொல்லிவிட்டு போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தெர்மாகோல் மாஜி வெளிநாடு செல்லும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thermagol Maji ,ThermaCol ,Peter Mama ,Thermakol Maji ,
× RELATED கோயம்பேடு கட்சி தலைமை மீதுள்ள...