×

மணி பற்றி மீதா கமென்ட்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘குட் நைட்’ படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஹீரோயின் மீதா ரகுநாத், ‘கதை சொல்வதற்காக இயக்குனர் என்னைச் சந்தித்தபோது, எங்கள் உரையாடல் பத்து நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே சென்ற பிறகு எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.

படத்தின் திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் ெராம்ப யதார்த்தமாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்போது படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஹீரோ மணிகண்டன் மனிதநேயம் கொண்டவர். படப்பிடிப்பில் அவருடன் பணியாற்றும் நேரத்தில் அதை நான் உணர்ந்தேன்’ என்றார். மணிகண்டன் கூறுகையில், ‘நல்ல படங்களை உருவாக்கியுள்ளோம் என்பது மட்டுமே மனநிறைவைக் கொடுக்காது.

அப்படம் தியேட்டரில் வெளியாகி, மக்களின் ஆதரவை எந்தளவுக்குப் பெறுகிறது என்பதில் மட்டுமே அதன் உண்மையான வெற்றி இருக்கிறது. இதில் நான் நடித்தது மட்டுமின்றி, விநாயக் சந்திரசேகரனுடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். ஷான் ரோல்டன் இசை அமைக்க ஒப்புக்கொண்ட பிறகுதான், இது ஒரு திரைப்படம் என்று பலர் ஏற்றுக்கொண்டனர்’ என்றார்.

The post மணி பற்றி மீதா கமென்ட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meetha ,Thanksgiving Announcement ,Vinayak Chandrasekaran ,Meetha Ragunath ,Meetha Comment ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குட்நைட் மிதா ரகுநாத் ரகசிய திருமணம்