×

காஞ்சிபுரத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கி 9ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர விண்ணப்பித்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இந்த ராணுவ முகாமில் பங்கேற்று தங்களது தகுதிகளை நிரூபித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்கின்றனர். அக்னிவீர் டெக்னிக், அக்னிவீர் ட்ரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி, சோல்ஜர் டெக்னிக், நர்சிங் அசிஸ்டெட்ண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு இந்த முகாமில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில், தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் கலந்துகொள்கின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Kanchipuram ,Chengalpattu ,Kanchipuram… ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் செப்டம்பரில்...