- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- யூனியன் அரசு
- காஞ்சிபுரம்
- மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- நகர செயலாளர்
- ஸ்ரீதர்
- மாவட்ட செயலாளர்
- கே. நேரு
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் கே.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பேசினர்.
மேலும், சிறு, குறு மற்றும் 100 நாள் வேலை பணிகளுக்கு நிதி குறைப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை, ஏழை-எளிய மக்களுக்கு எதிரான பட்ஜெட், விலைவாசி வியர்வை கண்டு கொள்ளாத நிர்மலா சீதாராமன் பட்ஜெட், இளைஞருக்கு வேலைவாய்ப்பு இல்லாத பட்ஜெட் போன்றவற்றை கண்டித்து பேசினார்கள். இந்த, ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.