தேனி, பிப். 6: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: அரசு சார்ந்து இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளையும் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். விடுதிகளில் சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும். தனியார் விழாக்கள் மற்றும் அன்னதானக்கூடங்களில் உணவுகள் வீணாகுவதை தவிர்த்து அவைகளை பிறவகை பயன்பாட்டிற்கு உட்படுத்த உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தரமான உணவுப்பொருட்கள் தயாரிப்பதையும் மற்றும் எண்ணெய் வகைகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத உணவு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post எண்ணெய் வகைகளை மீண்டும், மீண்டும் உபயோகிக்காதீர்கள் appeared first on Dinakaran.