- திருப்பூர்
- மாவட்ட கலெக்டர்
- கிறிஸ்துராஜ்
- சரவணன்
- திருப்பூர் கலெக்டர் அலுவலகம்
- திருப்பூர் தெற்கு தஹ்சில்தார்
- திருப்பூர் சேகரிப்பாளர் அலுவலகம்...
- தின மலர்
திருப்பூர், பிப். 6: திருப்பூர் மாவட்டத்தில் 13 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளராக இருந்த சரவணன் திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பொது மேலாளராக இருந்த ஜெய்சிங் சிவக்குமார் திருப்பூர் கோட்ட கலால் அலுவலராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தாராக இருந்த மகேஸ்வரன் திருப்பூர் கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும், திருப்பூர் தெற்கு தாசில்தாராக இருந்த மயில்சாமி திருப்பூர் கலெக்டர் அலுவலக குற்றவியல் அலுவலக மேலாளராகவும், திருப்பூர் கலால் உதவி ஆணையாளர் அலுவலக முன்னாள் மேலாளராக இருந்த ராமலிங்கம் திருப்பூர் உதவி கலால் அலுவலக மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் கோட்ட கலால் அலுவலராக இருந்த ராகவி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் முத்திரைகள் தனி தாசில்தாராக இருந்த பாபு தமிழ்நாடு வாணிப கழக கிடங்கு மேலாளராகவும், மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராக இருந்த கவுரி சங்கர் உடுமலை தாசில்தாராகவும், மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த பானுமதி திருப்பூர் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கு மேலாளராக இருந்த ஜெகதீஸ்குமார் திருப்பூர் முத்திரைகள் தனிதாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்களுக்கு தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, காங்கயம் கிடங்கு உதவி மேலாளராக இருந்த கதிர்வேல் திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தாராக இருந்த குணசேகரன் மடத்துக்குளம் தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக ஓ-பிரிவு தலைமை உதவியாளராக இருந்த சபரிகிரி பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
The post திருப்பூரில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.