×

விழுப்புரத்தில் சோதனையில் வசமாக சிக்கினர் பைக் பெட்ரோல் டேங்க்கில் ரகசிய அறை வைத்து மதுபாட்டில் கடத்தல் 180 பாட்டில்களுடன் 2 பேர் கைது

விழுப்புரம், பிப். 6: விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் நேற்று பிற்பகல் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிலிருந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மீது சந்தேகம் எழவே வாகனத்தை முழுமையாக சோதனை நடத்தினர். அதில் பெட்ரோல் டேங்க் இருக்கும் பகுதியினை திறந்து பார்த்தபோது ரகசிய அறை வைத்து அதில் 180 புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்ததை கண்டறிந்தனர்.பெட்ரோல் டேங்க்கிற்கு பதிலாக சீட்டின் கீழ் பகுதியில் சிறிய அளவிலான ெபட்ரோல் டேங்க் அமைத்து அதன் மூலம் பைக்கை இயக்கியதும், பெட்ரோல் டேங்க் இருக்கும் பகுதியில் ரகசிய அறையை வைத்து பல நாட்களாக புதுச்சேரியிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மதுபாட்டில்களை கடத்தி வந்து அந்த பகுதிகளில் கள்ளசந்தையில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விழுப்புரம் ஜிஆர்பி தெரு பகுதியை சேர்ந்த சந்துரு(25), தட்டு சரவணன்(28) என்பதும், இவர்கள் போலீசார் கண்டுபிடிக்க முடியாதபடி பைக் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறையை வைத்து மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள், ரகசிய அறை பொருத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post விழுப்புரத்தில் சோதனையில் வசமாக சிக்கினர் பைக் பெட்ரோல் டேங்க்கில் ரகசிய அறை வைத்து மதுபாட்டில் கடத்தல் 180 பாட்டில்களுடன் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram West Police Station police ,Puducherry ,
× RELATED போலி கால்சென்டர் நடத்தி...