- தவெகா
- வனதி சீனிவாசன்
- கோயம்புத்தூர்
- கோவை ரேஸ்கோர்ஸ்
- மக்கள் சேவை மையம்
- பாஜக தேசிய மகளிர் பிரிவு
- ஜனாதிபதி
- சட்டமன்ற உறுப்பினர்
கோவை: கோவை பந்தய சாலையில் மக்கள் சேவை மையம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுதான் போராட்டம் நடத்த வேண்டிய நிலை எதிர்கட்சிகளுக்கு உள்ளது. நீதிமன்றம் சென்றுதான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது. டெல்லி மக்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள். இத்தேர்தல் முடிவுகளை உற்சாகத்தோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் நியமனத்தில் இவ்வளவு குளறுபடிகள் என்றால், ஒரு அரசியல் இயக்கம் அடுத்த பரிணாமத்தை அடையுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தவெக அரசியல் இயக்கமாக பரிணாமம் அடைவது சந்தேகமே: வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.