×

நாளை முதல் பழங்குடியினர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி

சென்னை: சென்னையில் 16வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மை பாரத், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டின் 16வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 44 பங்கேற்பாளர்களும், மத்தியப்பிரதேச மாநிலத்தை 44 பங்கேற்பாளர்களும், சத்தீஸ்கர் மாநிலத்தை 132 பங்கேற்பாளர்களும் ஆக மொத்தம் 220 பழங்குடி இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ளது, தொடக்க விழா வரும் 8ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது. குறிப்பாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நாட்டின் பல தரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

The post நாளை முதல் பழங்குடியினர் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Senthilkumar ,State Director ,My Bharat ,Ministry of Youth Affairs and Sports ,Tamil Nadu and ,Puducherry ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...