- விவசாயத் தொழிலாளர் சங்கக் குழுக் கூட்டம்
- முத்துப்பேட்டை
- யூனியன்
- தமிழ்
- தமிழ்நாடு
- விவசாயத் தொழிலாளர் சங்கக் குழு
- தியாகி சிவராமன் நினைவு கட்டிடம்
- முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்
- தொழிற்சங்கத் தலைவர்
- ராஜா
- செயலாளர்
- சிவச்சந்திரன்…
முத்துப்பேட்டை, பிப.5: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேடை தியாகி சிவராமன் நினைவக கட்டிடத்தில் ஒன்றிய தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ராஜா தலைமை வகித்தார், இதில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகையன், ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டி உதவினார்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க வலிறுத்தியும் எதிர் வரும் 12.02.2025 புதன்கிழமை ஆலங்காடு கிராமத்தில் உள்ள முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
The post முத்துப்பேடையில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.