×

தாட்கோ நிறுவனம் சார்பில் ரூ. 77.89 இலட்சத்தில் அறிவு சார் மையம்

 

தா.பழூர், பிப். 5: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழன்மாதேவி ஊராட்சி, அமிர்தராயன்கோட்டை கிராமத்தில், தாட்கோ நிறுவனம் சார்பில், ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில், கிராம அறிவு மையக் கட்டிடம் கட்டுமான பணிக்கு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், தாட்கோ தலைவர் உ.மதிவாணன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி ராஜஸ்ரீ, செயற்பொறியாளர் அருண்குமார், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஆனந்தன், உதவி பொறியாளர் பாண்டீஸ்வரி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா, கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் தாட்கோ சேர்மேனுமான மதிவாணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் கடன், விவசாய நிலம் வாங்க கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் யுபிஎஸ்சி தேர்வு எழுத உயர்ந்த நிலையில் உள்ள கல்வி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்கு ரூபாய் 2 லட்சம் வரை உதவி செய்கிறது.

The post தாட்கோ நிறுவனம் சார்பில் ரூ. 77.89 இலட்சத்தில் அறிவு சார் மையம் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Tha.Pazhur ,Amirtharayankottai ,Cholanmadevi ,Tha.Pazhur, Ariyalur district ,MLA ,K.S.K.Kannan ,Knowledge ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது