நாகப்பட்டினம்,ஜன.5: கீழ்வேளூர் அருகே தனிநபர் மணல்குவாரி அமைக்கவுள்ளதை தடை செய்ய கோரி மாதர்சங்கம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்த மாதர் சங்கம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் வந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் கீழ்வேளூர் தாலுகா மூங்கில்குடி பகுதியில் வசித்து வருகிறோம். அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் தனியார் மண்குவாரி அமைக்க உள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும். எனவே தனிநபர் மண்குவாரி அமைக்க இருப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post கீழ்வேளூர் அருகே மணல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் appeared first on Dinakaran.
