×

மாடர்ன் பள்ளியாக மாற்ற தொண்டி அரசு பள்ளி ஆய்வு

தொண்டி, பிப்.5: தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாடர்ன் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நேற்று நடைபெற்றது. தொண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை மாடர்ன் பள்ளியாக மாற்றுவது தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக பெற்றோர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் மூலம் ஒரு குழுவை நியமித்து பள்ளியை ஆய்வுசெய்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜகான்பானு ஜவகர்அலிகான் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர்.

The post மாடர்ன் பள்ளியாக மாற்ற தொண்டி அரசு பள்ளி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thondi Government School ,Thondi ,Thondi Government Girls’ Higher Secondary School ,Dinakaran ,
× RELATED தொண்டி ஊராட்சி பள்ளியில் புத்தக கண்காட்சி