×

மாணவர்களுக்கு திறனறிதல் தேர்வு

 

காளையார்கோவில், பிப்.5: காளையார்கோவிலில் தொடக்கநிலை மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது. காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 4 மற்றும் 5ம் வகுப்புகளை சேர்ந்த தொடக்கநிலை மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வது குறித்து இப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், நர்சரி தொடக்க பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வுக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி செய்திருந்தார்.

The post மாணவர்களுக்கு திறனறிதல் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kalaiyarkovil ,Tamil Nadu Science Movement ,
× RELATED காளியம்மன் கோயில் தேரோட்டம்