×

திண்டுக்கல்லில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பிப். 5: திண்டுக்கல் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக மதுரை கோட்ட சங்க துணை தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். யூனிட் 1 கிளை தலைவர் பரத், செயலாளர் ஜான்பால், யூனிட் 2 கிளை தலைவர் ஜான்சன், செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் உயர்வை கண்டித்தும், அதை உடனே திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Dindigul ,All India Life Insurance Corporation Employees Association ,All India Life Insurance Corporation Madurai Division ,Vice President ,Vanchinathan ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு