×

துரை வைகோ எம்பி பெயரில் போலி லெட்டர்பேடு மோசடி: கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது

புதுக்கோட்டை: சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு ஸ்டீபன் சத்யராஜ் என்பவர் கடந்த நவ.21ம்தேதி பயணம் செய்ய திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடு மூலமாக ஈகியூ படிவம் ரயில்வே துறைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகம், ஈகியூ படிவத்தை ஏற்று ஸ்டீபன் சத்யராஜ் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதித்துள்ளது.

எம்பி லெட்டர் பேடில் கொடுக்கப்பட்ட ஈகியூ படிவத்தின் உண்மை தன்மையை அறிய அதனை, அவரது உதவியாளரான சங்கருக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து சங்கர், துரை வைகோவை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் அதுபோன்ற கடிதம் கொடுக்காதது தெரிய வந்துள்ளது. எம்பி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உதவியாளர் சங்கர், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தபால் மூலம் புகார் கொடுத்தார்.

பயணியின் செல்போன் எண்ணை புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் டிரேஸ் செய்து பார்த்தனர். சங்கரன்கோவில் சங்கர்நகர் 2ம் வீதியை சேர்ந்த ராம்குமார் (30) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று காரைக்குடியில் இருந்த ராம்குமாரை கைது செய்தனர். அவர், சங்கரன்கோவிலில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்ததும், அங்கேயே எம்பி பெயரில் போலியாக லெட்டர் பேடு தயார் செய்து, ஈகியூ கடிதம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

The post துரை வைகோ எம்பி பெயரில் போலி லெட்டர்பேடு மோசடி: கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Durai Wiko MB ,PUDUKKOTA ,STEPHEN SATYARAJ ,CHENNAI ,TANKASHI DISTRICT ,SANKARANKOIL ,PATHIKAI EXPRESS ,TRICHI MP ,DURAI VIGO ,EQ FORM RAILWAY DEPARTMENT ,Durai Wiko ,MB ,Dinakaran ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...