×

கொத்தலரிவிளை ஆலய திருவிழாவில் அந்தோணியார் சப்பர பவனி

ஏரல், பிப். 5: கொத்தலரிவிளை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏரல் அருகே உள்ள கொத்தலரிவிளை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, கடந்த ஜன.23ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழா காலங்களில் தினசரி ஆராதனை, திருப்பலி நடந்தது. முக்கிய திருவிழா பிப்.3ம் தேதி நடந்தது. அன்று மாலை திருவிழா மாலை ஆராதனை, மங்களகிரி தூய ஜோசப் மெட்ரிக். பள்ளி முதல்வர் விஜயன் தலைமையில் நடந்தது. தொடர்ந்து சவேரியார்புரம் பங்குத்தந்தை மரியஅரசு மறையுரை நிகழ்த்தினார். இரவு நடைபெற்ற சப்பர பவனி நிகழ்ச்சியில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை திருவிழா திருப்பலி மங்களகிரி டிவைன் தியான இல்லம் கிராசியுஸ் தலைமையில் நடந்தது.தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஞானப்பிரகாசியார்பட்டினம் பங்குத் தந்தை ஜஸ்டின் தலைமையில் கொத்தலரிவிளை இறைமக்கள் செய்து இருந்தனர்.

The post கொத்தலரிவிளை ஆலய திருவிழாவில் அந்தோணியார் சப்பர பவனி appeared first on Dinakaran.

Tags : Anthony ,Chappara ,Bhavani ,Kothalarivilai Temple Festival ,Eral ,Chappara Bhavani ,Kothalarivilai Kodi Arputhar St. Anthony's Temple Festival ,Kothalarivilai St. Anthony's Temple Festival ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி