- பூட்டானியர்கள்
- கிங் ஜிக்மே கேசர்
- மகாகும்ப மேளா
- மகாகும்பா நகர்
- இந்தியா
- கங்கை
- யமுனா
- சரஸ்வதி
- பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம்
- கும்ப
- திருவிழா
- கிங் ஜிக்மே
மகாகும்ப நகர்: இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நேற்று மகாகும்பமேளாவில் புனித நீராடினார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் மகாகும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி கும்பமேளா தொடங்கியதிலிருந்து 37.50 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.நேற்று மட்டும் மதியம் 12 மணி வரை 54 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், யாத்ரீகர்கள் புனித நீராடி உள்ளனர்.
கும்பமேளாவில் புனித நீராட பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். லக்னோ விமான நிலையம் வந்திறங்கிய ஜிக்மேவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் பூடான் மன்னருக்கு பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் நேற்று புனித நீராடுவதற்காக யோகி ஆதித்ய நாத்துடன் பிரயாக்ராஜ் சென்றார். அங்கு நீராடுவதற்கு முன் அர்க்யா போன்ற சடங்குகளை செய்து வழிபட்டார். பின்னர் மன்னர் ஜிக்மே புனித நீராடினார்.
The post மகாகும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர் ஜிக்மே appeared first on Dinakaran.