×

சீட் பிடிப்பதில் தகராறு சென்னை ரயிலில் வாலிபர் கொலை

மும்பை: சென்னையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜோத்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமர் சிங் மற்றும் பர்பத் பரிஹார் ஆகியோர் ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்தனர. ரயில் பூசாவல் நிலையம் சென்றபோது அங்கு சீட்டில் அமர வந்த பயணி ஒருவருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த பயணி தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். ரயில் நந்தூர்பாரை அடைந்ததும், பயணியின் நண்பர்கள் ரயிலில் ஏறி சுமர் சிங் மற்றும் பர்பத் பரிஹார் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிங் பரிதாபமாக இறந்தார்.

The post சீட் பிடிப்பதில் தகராறு சென்னை ரயிலில் வாலிபர் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Sumer Singh ,Parbat Parihar ,Jodhpur ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...