×

ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு கூகுளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மும்பை: ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவை பற்றி யூடியூபிலும் பிற இணையதள செய்திகளிலும் தவறான தகவல்கள் வந்தன. அதாவது ஆராத்யாவுக்கு உடல் நிலை பிரச்னை இருப்பதாக புரளி கிளப்பப்பட்டது. இது தொடர்பாக முன்பே வழக்கு தொடரப்பட்டது. அப்படி இருந்தும் யூடியூப்பில் சம்பந்தப்பட்ட வீடியோ நீக்கப்படவில்லை. இதையடுத்து ஆராத்யா பச்சன் மீண்டும் ஒரு மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது உடல் நிலை குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்களை யூடியூப் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அகற்ற உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு இதற்கு முன்பு தான் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவில் இடம் பெற்று இருக்கும் தகவல்கள் தொடர்பான அறிக்கையை வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கூற வாய்ப்பு இருக்கிறது என்று கூறி மனு மீதான விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு கூகுள், பாலிவுட் டைம் மற்றும் இணையத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு கூகுளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Aishwarya Rai ,Google ,Mumbai ,YouTube ,Aaradhya ,YouTube… ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...