×

மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தார் அதிபர் ட்ரம்ப்..!!

வாஷிங்டன்: மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் 30 நாட்களுக்கு ஒத்திவைத்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரி விதிப்பதாக அறிவித்தார். அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியும், சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்த புதிய வரிகள் அமெரிக்கக் குடும்பங்களுக்கே சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அதை அதிபர் டிரம்ப் அமல்படுத்தினார். அமெரிக்காவில் சட்டவிரோதமான குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும் வரை புதிய வரிகள் அமலில் இருக்கும் என தெரிவித்து கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதல் 25% வரி விதித்தார். இந்த நிலையில், மெக்ஸிகோ அதிபரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்நடவடிக்கை தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது.

 

The post மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்தார் அதிபர் ட்ரம்ப்..!! appeared first on Dinakaran.

Tags : PRESIDENT TRUMP ,MEXICO ,WASHINGTON ,U.S. ,PRESIDENT ,DONALD TRUMP ,US President Donald Trump ,Canada ,China ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா விதித்த கனடா, மெக்சிகோ மீதான 25% வரி அமல்