- ஷிப்கோட்
- காவல் நிலையம்
- ராணிப்பேட்டை மாவட்டம்
- Ranipettai
- Ranipetta
- சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சிப்காட் காவல் நிலையம்
- சிப்காட் காவல் நிலையம்
- ஷிப்ப்கோட் காவல் நிலையம்
- தின மலர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி சிப்காட் காவல் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து சிப்காட் காவல் நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள வரவேற்பாளர், பொதுமக்கள் அமரும் இடத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து கரும்புகை சூழ்ந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். இதே போல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஜார் வீதியில் உள்ள அரிசிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை சிப்கார் பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் சென்னை பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஹரியை கைது செய்த போலீசார் ராணிப்பேட்டை அழைத்து சென்றபோது காவேரிபாக்கம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த ஆய்வாளர் சசிகுமார் தற்காப்புக்காக ஹரியை காலுக்கு கீழே சுட்டு பிடித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லாத நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஹரி ஆகியோர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களை தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், சிப்கார் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பரத், விஷால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.
