×

அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

 

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர ஒன்றிய மற்றும் பேரூர் கழக திமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு வடதாரை காமராஜபுரத்திலிருந்து திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். தொடர்ந்து தாராபுரம் அண்ணா உருவ சிலைக்கு நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி,

பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி, குளத்துபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுதா கருப்புசாமி, தாராபுரம் நகர துணைச் செயலாளர்கள் பிலோமினா, தவச்செல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தி, நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்பழகன், ஸ்ரீதர், சரஸ்வதி, முத்துலட்சுமி, ஆதிதிராவிடர் நலக்குழு சிவசங்கர், கணேசன், அருக்காணி, இந்திராணி, ஜெயக்குமார், சாகுல் ஹமீது, முகைதீன் பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.

The post அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி appeared first on Dinakaran.

Tags : Anna Memorial Day Peace Rally ,Tarapuram ,Tarapuram, Tiruppur district ,DMK ,Kamarajapuram ,Vadatharai ,Perur Kazhagam DMK ,Anna Memorial Day ,city secretary ,Muruganandam ,Dinakaran ,
× RELATED தாராபுரத்தில் தமிழ் மாநில விவசாய...