- ராமநாதபுரம்
- சாயல்குடி வனத்துறை
- புதுக்குடியிருப்பு
- டி. கல்புட்டி
- Kamudi
- சாயல்குடி வன அலுவலர்
- விருதுநகர் வனப்பகுதி...
ராமநாதபுரம்,பிப்.4: கமுதி அருகே டி.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள், அரியவகை பறவைகள், உயிரினங்கள் வேட்டை நடப்பதாகவும், உயிரினங்களின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சாயல்குடி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வன பாதுகாப்புப்படை தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டி.கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் விஜயன் மகன் அர்ஜுன்(39) ஆட்காட்டி பறவையை தீயில் சுட்டு வாட்டி கொண்டிருந்தார். அவரை விசாரித்ததில் முத்துக்குமார்(29) இருவரும் சேர்ந்து வேட்டையாடி பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து முத்துக்குமாரை விரட்டி பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது வீட்டின் அருகே சாக்கு பையில் உயிருடன் 4 முயல்கள் இருந்துள்ளது.
ஒரு கூண்டில் மண்ணுளி பாம்பு ஒன்று உயிருடன் அடைக்கப்பட்டிருந்தது. மற்றொரு சாக்கு பையில் பனங்காடை, கொக்கு உட்பட பல அரிய வகை பறவைகளின் இறகுகள் மற்றும் குடல்கள் இருந்தது. இதனையடுத்து அர்ஜுன், முத்துக்குமார் ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர் கமுதி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்பு உயிருடன் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு, 4 முயல்கள் கடலாடி அருகே மேலச் செல்வனூர் அரசு காப்புகாட்டு பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
The post மண்ணுளி பாம்பு முயல் வேட்டை இரண்டு பேர் கைது appeared first on Dinakaran.
