×

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கோயில்களில் சமபந்தி விருந்து

மதுரை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன், அழகர்கோயில் கள்ளழகர் கோயில்களில் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழாவிற்கான கொடியேற்றம், மீனாட்சியம்மன் கோயிலில் சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து கலெக்டர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தெப்பத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மீனாட்சியம்மன் கோயில் செயல் அலுவலகரானஇணை ஆணையர் கிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இதற்கிடையே பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எம்எல்ஏக்கள் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, அழகர் கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலிலும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கோயில்களில் சமபந்தி விருந்து appeared first on Dinakaran.

Tags : Memorial Day of the Apostle Anna ,Madurai ,Anna Memorial Day ,Meenadsyamman ,Kallahagar ,Alaagarkoil ,Madurai Vandiyur ,Mariyamman ,Temple ,Meenakiyamman Temple ,Collector ,Sangeetha ,Patriarch ,
× RELATED மேல் பகுதியில் வெளிநாட்டு ரப்பருடன்...