×

வத்தலக்குண்டுவில் பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி கிளை ஊழியர் சங்கம், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் செந்தில் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ரமேஷ் விளக்கவுரையாற்றினார். கோட்ட சங்க இணை செயலாளர் ரமேஷ் பாண்டியன், எல்ஐசி லியாபி முகவர் சங்க செயலாளர் ஜாகீர் உசேன், வளர்ச்சி அதிகாரி கோபால் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் 2025ம் ஆண்டுக்கான பட்ஜட்டில் இன்சூரன்ஸ் துறையில் தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை நூறு சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்ததை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற கோரியும் கோஷமிட்டனர். இதில் எல்ஐசி கிளை ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். வளர்ச்சி அதிகாரி அருண் நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டுவில் பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vattalakundu ,Vattalakundu LIC ,LIC Branch Employees Association, Agents and Development Officers Association ,Branch President ,Senthil ,Branch Secretary ,Ramesh ,Kota Sanga… ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு பண்ணைப்பட்டியில் ஒளிப்பொறி செயல் விளக்கம்