வேடசந்தூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள கொரக்கை பகுதியை சேர்ந்த 8 பேர் நேற்று காலை பழநிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்திருந்தனர். காரை அப்பகுதியை சேர்ந்த பாரதி (23) என்பவர் ஓட்டி வந்தார். தரிசனம் முடிந்து இரவு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே வண்டி கருப்பணசாமி கோயில் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் டிரைவர் பாரதி, காரில் பயணம் செய்த கலையரசி (45), பரமசிவம் (40) மற்றும் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்வழியாக சென்றவர்கள், வடமதுரை நெடுஞ்சாலை துறை போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்கள் 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அய்யலூர் அருகே கார் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
