- திமுக
- அண்ணா
- அண்ணா நினைவு தினம் அமைதி ப
- நாகப்பட்டினம்
- தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு சங்கம்
- ஜனாதிபதி
- Gauthaman
- தின மலர்
நாகப்பட்டினம்,பிப்.4: அண்ணாவின் 56வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் அமைதி பேரணி புறப்பட்டது.
புதிய பஸ்ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி சாலை வழியாக அமைதி பேரணி சென்று பாரதி மார்கெட் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் மாரிமுத்து நகர துணை செயலாளர் சிவா, ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே போல் புத்து£ர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post நாகப்பட்டினத்தில் அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.
