×

அண்ணா நினைவு நாள் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு விருந்து

 

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். இதனைத் தொடர்ந்து, கோயில் சார்பில், ஏழை எளிய மக்கள் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், கரூர் தாசில்தார் குமரேசன் உட்பட கோ யில் அதிகாரிகள், அறங்காவல் குழுத் தலைவர் மற்றும் பக்தர்கள் அதிகளவு கலந்து கொண்டனர்.

The post அண்ணா நினைவு நாள் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சிறப்பு விருந்து appeared first on Dinakaran.

Tags : Kalyana Venkatraman Swamy Temple ,Anna Memorial Day ,Karur ,Thanthonimalai ,Anna Memorial Day… ,
× RELATED கரூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்