×

ஜம்முவில் தீவிரவாத தாக்குதலில் முன்னாள் வீரர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பெஹிபாக் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் மன்சூர் அகமது வாகே, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வழியிலேயே மன்சூர் அகமது உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஜம்முவில் தீவிரவாத தாக்குதலில் முன்னாள் வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Jammu ,Srinagar ,Mansoor Ahmed Wage ,Behibag ,Kulgam district ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவு