×

கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மசோதா: மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: திரிபுவன் சஹாகாரி கூட்டுறவு பல்கலைகழகம் என்று பல்கலைகழகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒன்றிய கூட்டுறவு இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜர் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: கூட்டுறவுத் துறையில், தகுதிவாய்ந்த மனிதவளம் மற்றும் தற்போதுள்ள ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கான தற்போதைய மற்றும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்கான கல்வி மற்றும் பயிற்சிக்கான கட்டமைப்பு போதுமானதாக இல்லை.

கூட்டுறவு துறையில் நிர்வாகம், மேற்பார்வை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதி வாய்ந்த மனித வளத்தை உருவாக்கும் வகையில் பல்கலைகழகம் செயல்படும். உருவாக்கப்பட உள்ள பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் திறன் மேம்பாடு தொடர்பாக நாடு முழுவதும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னையை தீர்க்கும்.

The post கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மசோதா: மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : People's Republic ,New Delhi ,Tribhuvan Sahakari Cooperative University ,Union ,Co-Minister ,Krishan Paul Gurjar ,Lok Sabha ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!