×

திருச்செந்தூர் முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திரசபையில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர், பிப்.4: திருச்செந்தூர்  முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திரசபையில் வருஷாபிஷேக விழா நடந்தது. திருச்செந்தூர், தெப்பக்குளம் அருகே உள்ள  முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திர சபையில் வருஷாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் மற்றும் யாகம் நடந்தது. அதன் பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வல்லப விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, சண்முகார்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிவசாமி தீட்சிதர் தலைமையிலான குழுவினர் யாகமும், திருப்புகழ் அன்பர்கள் திருப்புகழும் பாடினர். மதியம் அன்னதானமும், இரவு சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள், திரிசுதந்திரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கயிலை மணி முத்து சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் திருப்புகழ் சபையினர் செய்திருந்தனர்.

The post திருச்செந்தூர் முருகானந்த சங்கீத திருப்புகழ் சித்திரசபையில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Murugananda Sangeetha Thiruppugazh ,Chitira Sabha ,Tiruchendur ,Murugananda Sangeetha Thiruppugazh Chitira Sabha ,Theppakulam, Tiruchendur ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...