புதுடெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது: தேர்தலில் வெல்வதற்காக பாஜ ஏற்கனவே அநியாயமான உத்திகளை மேற்கொண்டு வருகிறது. இதையும் மீறி ஆம் ஆத்மி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. அதே சமயம், கட்சி உருவானதில் இருந்து சந்திக்காத மாபெரும் தோல்வியை பாஜ சந்திக்கப் போவது உறுதியாகி உள்ளது.
இதனால் தேர்தலில் வெற்றி பெற அவர்கள், குண்டர்களையும் போலீசையும் தவறாக பயன்படுத்துவார்கள். குடிசைவாசிகளுக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை லஞ்சம் கொடுக்கவும் அவர்களின் விரல்களில் கருப்பு மை பூசவும் முயற்சிப்பார்கள். பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் மை வைக்க விடாதீர்கள். உங்கள் வாக்குகளை விற்பது உங்கள் மரண உத்தரவில் கையெழுத்திடுவதற்கு சமம். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
The post தேர்தலில் தோல்வி உறுதியாகி விட்டதால் குண்டர்களை பயன்படுத்தி முடிவை மாற்ற பாஜ திட்டம்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.