×

கடந்த ஆண்டில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 பேர் கைது

புதுடெல்லி: கடந்த ஆண்டில் விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 பேர் கைது செய்யப்பட்டனர் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மொத்தம் 728 வெடி குண்டு மிரட்டல்கள் வந்தன. இதில், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு 714 மிரட்டல்கள் வந்தன என்று மாநிலங்களவையில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமர்ப்பித்த தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்து மூலம் அளித்த பதிலில், கடந்த ஆண்டில் 728 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதில் இந்திய விமான நிறுவனங்களில் இண்டிகோவுக்கு அதிகபட்சமாக 216, ஏர் இந்தியாவுக்கு 179,விஸ்தாராவுக்கு 153,ஆகாஸா ஏர் 72, ஸ்பைஸ் ஜெட் 35,அலையன்ஸ் ஏர் 26,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 19, ஸ்டார் ஏர் விமானங்களுக்கு 14 மிரட்டல்களும் வந்தன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 14 மிரட்டல்கள் வந்தன. அதில், எமிரேட்ஸ் 5, ஏர் அரேபியாவுக்கு 3 மிரட்டல்கள் வந்தன.இதில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

The post கடந்த ஆண்டில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union ,minister ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...