×

சட்டீஸ்கரில் நக்சலைட் சுட்டு கொலை

கங்கர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிசண்டையில் ஒரு நக்சலைட்டு சுட்டு கொல்லப்பட்டார். சட்டீஸ்கர் மாநிலம்,கங்கர் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வன பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட ரிசர்வ் கார்டு போலீஸ் மற்றும் பிஎஸ்எப் படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது பாதுகாப்பு வீரர்கள் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். சில மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் ஒரு நக்சலைட் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே போல் அவரிடம் இருந்து துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

The post சட்டீஸ்கரில் நக்சலைட் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : Naxalite ,Chhattisgarh ,Gangar ,Naxalites ,Narayanpur ,
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...