×

மேம்பட்ட நீர் மேலாண்மைக்கு ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு: ஒன்றிய அரசு தகவல்

புது டெல்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட நீர்வள மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்புக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் ஆகியவற்றை தனது அமைச்சகம் பயன்படுத்த உள்ளது என்று ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் எழுத்து மூலம் அளித்த பதில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டமிடல், தொலைநிலை உணர்தல், ஏஐ-அடிப்படையிலான பயிர் கண்காணிப்பு, தானியங்கு ஸ்மார்ட் நீர்ப்பாசன அமைப்புகள், முன்கணிப்பு பராமரிப்பு ஆகியவற்றிற்கு ஏஐ- அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று நீர்வள அமைச்சகம் கூறியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஏஐ மாதிரிகள் நிலத்தடி நீர் நடத்தையின் மேம்பட்ட கணிப்புகளை வழங்க முடியும். மாசு மற்றும் நீர் ஆதாரம் குறைதல் போன்றவற்றினால் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் காணவும் செயலூக்கமான தலையீடுகளை செயல்படுத்தவும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மேம்பட்ட நீர் மேலாண்மைக்கு ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,Jal Shakti ,Minister ,C.R. Patil ,Rajya ,Sabha… ,Dinakaran ,
× RELATED புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான...