×

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, புடவைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2025) இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, புடவைகளை வழங்கினார்.

முன்னதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் சேப்பாக்கம் அய்யா பிள்ளை தெருவில் ரூ.94.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குடியிருப்புகள் கொண்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெருவில் ரூ.94.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகள் கொண்ட புதிய கட்டடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., நிலைக் குழுத்தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, மண்டல குழுத்தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் திரு.ARP.M.காமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, புடவைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Memorial Day of the Great Anna ,Minister Assistant Minister ,Stalin ,Chennai ,Ambassador ,Anna ,Deputy Chief Minister ,Tamil Nadu ,Shri. ,Udayaniti Stalin ,Thiruvallikeni Arulmigu Parthasarati Swami Temple ,Hindu Religious Foundation Department ,Minister ,Adyanidhi Stalin ,Anna Memorial Day ,
× RELATED அறிவுச் சாட்டையைச் சுழற்றி...