×

அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!.. திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!: துணை முதலமைச்சர் உதயநிதி!!

சென்னை: சென்னை வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது;

தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!

உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்!

எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!

ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!

தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாள் இன்று!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.

அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்!.. திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை!: துணை முதலமைச்சர் உதயநிதி!! appeared first on Dinakaran.

Tags : Anna ,Dravita ,Deputy Chief Minister ,Udayanidhi ,Chennai ,Udayaniti Stalin ,Valaja Road ,Tamil Nadu ,
× RELATED தஞ்சை அண்ண நகரில் திறந்தநிலை மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்