×

நாதக வேட்பாளரை தகுதி நீக்க போராட்டம்: சீமானையும் கைது செய்யக்கோரி தர்ணா

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலாவுக்கு ஆதரவு திரட்டி மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாதகவினர் மீது புகார் கொடுக்க வேட்பாளர் வெண்ணிலா மற்றும் கூட்டமைப்பினர், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து சீமானை கைது செய்யக்கோரியும், நாதக வேட்பாளரை தகுதி நீக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து டவுன் போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் வெடிகுண்டு வீசுவதாக பேசியுள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமானை தொகுதியில் இருந்து வெளியேற்றி அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

தபெதிகவினர் மீது நாதகவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றனர். அதற்கு போலீசார், ‘‘சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post நாதக வேட்பாளரை தகுதி நீக்க போராட்டம்: சீமானையும் கைது செய்யக்கோரி தர்ணா appeared first on Dinakaran.

Tags : Nathaka ,Seaman ,Tarna ,Erode ,National Federalists ,Executive Coordinator ,Thirumurukangandi ,Vanilla ,Erode East ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து