×

கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து 3 பேர் குழு விசாரணை தொடங்கியது

பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர்.ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உபி அரசு அமைத்துள்ளது. விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் முடிக்கவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 3 பேர் அடங்கிய விசாரணை குழுவினர் நேற்று பிரயாக்ராஜ் கங்கை ஆற்றுக்கு சென்று விபத்து நடந்த சங்கம் பகுதியை பார்வையிட்டனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புடன் குழு உறுப்பினர்கள் அங்கு சென்றனர். ஒரு பக்கம் பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்த போதிலும் அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தினர். போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்கள் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

The post கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்து 3 பேர் குழு விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kumbh Mela stampede ,Prayagraj ,Prayagraj Kumbh Mela ,UP government ,Allahabad High Court ,Harsh Kumar ,Kumbh Mela ,Dinakaran ,
× RELATED விமானப்படை அதிகாரி சுட்டுக்கொலை