- விழிப்புணர்வு
- நாகர்கோவில்
- நாகர்கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அகல்யா
- தலை
- பொருளாதார துறை
- சுசீலா பாய்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
நாகர்கோவில், பிப். 1: நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாணவி அகல்யா வரவேற்று பேசினார். பொருளாதாரத்துறை தலைவர் சுசீலா பாய் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கலந்து கொண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சக பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். எ.எஸ்.கே பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த அஜித் குமார் தொழில் முனைவோரின் தற்கால சவால்கள் என்ற தலைப்பில் பேசினார். மாணவி ஏஞ்சலின் நன்றி கூறினார். மாணவி சூரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிய மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கூட்ட ஏற்பாடுகளை வணிகவியல் பேராசிரியர்கள் டார்லிங் செல்வி, சஜீனா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
The post தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.
