×

தொலைதூர கிராமங்களுக்கும் இணையதள வசதி: அமைச்சர் தகவல்

சேலம்: சேலத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் ஸ்டார்ட்-அப் எக்ஸ்போ நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, ‘‘ஒரு டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரத்தை நோக்கி, சேலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.

இதில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தொலைதூர கிராமங்களுக்கும், தமிழக அரசு இணைய இணைப்பை விரிவுபடுத்தி வருகிறது. சிறிய ஐடி நிறுவனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post தொலைதூர கிராமங்களுக்கும் இணையதள வசதி: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem ,International Information Technology Conference and Start-up Expo ,Tamil Nadu ,
× RELATED நெல்லை ரெட்டியார்பட்டியில்...