×

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12ல் திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

திருவனந்தபுரம்: மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை கோயில் நடை கடந்த 20ம் தேதி காலை சாத்தப்பட்டது. இந்த வருடம் மண்டல, மகரவிளக்கு காலத்தில் கடந்த வருடத்தை விட 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆகவே கோயில் மொத்த வருமானமும் கடந்த வருடத்தை விட ரூ.80 கோடிக்கு மேல் அதிகரித்தது. இந்தநிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது.

The post மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12ல் திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Mandala ,Makaravilakku ,Sabarimala temple ,
× RELATED இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள்...