×

சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு


சென்னை: சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். இன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு போட்டிகளுக்கான கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு, விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னை தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 1500 மீ., 800 மீ., 600 மீ., 400 மீ., 200 மீ., 100 மீ., 50 மீ., ஓட்டப்பந்தயங்கள், 25 மீ. தவளை ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 4 x 50 மீ. மற்றும் 4 x 100 மீ. தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகள் பள்ளிகள் அளவிலும், மண்டல அளவிலும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

இவ்விழாவில், இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர்கள் த. விஸ்வநாதன் (கல்வி), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), மண்டலக்குழுத் தலைவர் பி. ஶ்ரீராமுலு மற்றும் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி ஶ்ரீதர், அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekarbabu ,Chennai inter-school ,Chennai ,P.K. Shekarbabu ,Chennai Inter-School Sports Competition ,Greater Chennai Corporation ,year ,Jawaharlal Nehru Sports Stadium ,Mayor ,R. Priya… ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...