×

செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மாஹே பகுதியில் மியாட் கண் மருத்துவமனை திறப்பு

* அதிபர் வேவல் ராம்கலவான் மருத்துவமனையை திறந்து வைத்தார்சென்னை : செஷல்ஸ் நாட்டின் தலைநகரமான மாஹே பகுதியில் மியாட் கண் மருத்துவமனையை அதிபர் வேவல் ராம்கலவான் மருத்துவமனையை திறந்து வைத்தார். செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மஹேயில் மியாட் இன்டர்நேஷனல் டோட்டல் ஐ கேர் (மியாட் கண் மருத்துவமனை) திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் தலைமை தாங்கினார். செஷல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் முன்னிலை வகித்தார். செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவான் மருத்துவமனையை திறந்து வைத்தார். அதிபரின் மனைவி லிண்டா ராம்கலவான், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பெக்கி விடோட், மருத்துவமனை இயக்குநர் லிசா செட்டி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு 2010ம் ஆண்டு முதல் மியாட் மருத்துவமானை தான் மருத்துவச் சேவையின் முதன்மை தேர்வாக இருந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையுள்ளவர்களில் 63 சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்காக செஷல்ஸ் நாடு மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது மியாட்டில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றனர். செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மஹேயில் 5 ஆயிரம் சதுர அடியில் மியாட் இன்டர்நேஷனல் டோட்டல் ஐ கேர் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 16 செஷல்ஸ் நாட்டினர் மற்றும் 6 இந்தியர்களும் பணியாற்றுகின்றனர். செஷல்ஸ் நாட்டில் முழுநேர மருத்துவச் சேவையை வழங்கும் முதல் இந்திய மருத்துவமனை இதுவாகும் என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது….

The post செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மாஹே பகுதியில் மியாட் கண் மருத்துவமனை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Myat Eye ,Hospital ,Mahe ,Seychelles ,President ,Wavel Ramgalawan ,Chennai ,Myat Eye Hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...