- சகரப்பள்ளி எதிர்ப்பு
- தஞ்சாவூர்
- சாகரப்பள்ளி
- அய்யாம்பேட்டை நகராட்சி
- தமிழ்நாடு அரசு
- தஞ்சாவூர் மாவட்டம்
- பாபனாசம் மாவட்டம்
- ஆண்டிப்பட்டி
- சாகரபல் பள்ளி
தஞ்சாவூர், ஜன. 31: அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழு சார்பில் அவசர ஆலோசனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு அறிவித்த உள்ள உள்ளாட்சி ஊராட்சியின் மறுசீரமைப்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைக்கும் திட்டம் உள்ளது. இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய கோரி வலியுறுத்தி சக்காரப்பள்ளி ஊராட்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள் , அமைப்புகள், போராட்டம் குழு அமைத்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜமாஅத் சபை செயலாளர் ஜனாப் முகமது ஆரிப் தலைமையில் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர். ஜனாப், முகமது இப்ராஹிம், கம்யூனிஸ்ட் ஒன்றிய அவைத் தலைவர் ஜனாப். ஷேக் அலாவுதீன், ரஸீம்மா சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேல்பர் கட்சி வட்டார தலைவர் மீரான் வரவேற்றார். கூட்டத்தில் எஸ். டி.பி.ஐ.மாவட்ட அமைப்பு செயலாளர் சலீம், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம், காங்கிரஸ் கிளை கமிட்டி தலைவர் சாதிக், போராட்ட குழு அப்துல் ரஷீது, முஸ்லிம் லீக் நிர்வாகி சபீர், அப்துல் ரசாக் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள் சங்கங்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அய்யம்பேட்டை பேரூராட்சியுடன் சக்காரப்பள்ளி ஊராட்சியை இணைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி வரும் 4.2.2025.அன்று சக்காரப்பள்ளி பேருந்து நிலையம் முன்பு ஒரு நாள் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. அடுத்த கட்டமாக சக்காரப்பள்ளி மற்றும் அய்யம்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் கரும்பு கொடி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post பேரூராட்சியுடன், ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு சக்கராப்பள்ளி பேருந்து நிலையம் முன் பிப்.4ம் தேதி உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.
