- ஆண்டுதோறும்
- இராசிபுரம்
- கூனவேலம்பட்டிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- ராசிபுரம் யூனியன்
- கலியபெருமாள்
- திருக்குறள்
- கபடி
- சிலம்பம்
ராசிபுரம், ஜன.31: ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள் தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகியவை நடந்தது. அதை தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. மேலும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பூபதி மற்றும் தொழிலதிபர் மணிவண்ணன், விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.