×

சாத்தான்குளம் அருகே முதியவரிடம் பைக், பணம், செல்போன் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை

சாத்தான்குளம், ஜன. 31: சாத்தான்குளம் அருகே முதியவரிடம் பைக், பணம், செல்போன் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகேயுள்ள இட்டமொழி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (60). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் சம்பவத்தன்று இரவு திசையன்விளைக்கு சென்று விட்டு தஞ்சை நகரம் வழியாக பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மர்மநபர்கள், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி வடிவேலிடம் இருந்து பைக், செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் எஸ்.ஐ. பொன்னு முனியசாமி வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post சாத்தான்குளம் அருகே முதியவரிடம் பைக், பணம், செல்போன் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : SATANKULAM ,Devil's Circle ,Vadivel ,Itamozhi South Street ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி