×

லிவ் இன் ஜோடிகள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம்: ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ( லிவ் இன் ரிலேஷன்ஷிப்) தம்பதிகள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். லிவ் இன் உறவில் உள்ள தம்பதிகள் பலர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி அனூப் குமார் தந்த் விசாரித்து வருகிறார். வழக்கை விசாரித்த நீதிபதி அனூப் குமார் நேற்று கூறுகையில், ‘‘ லிவ்-இன் உறவுகள் தனித்துவமானது. இதில் பல சட்ட, சமூக சவால்கள் உள்ளன. இதை நிவர்த்தி செய்ய, அரசாங்கம் முறையான சட்டத்தை இயற்றும் வரை அனைத்து லிவ்-இன் உறவுகளும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் லிவ்-இன் உறவுகளை பதிவு செய்யவும், தம்பதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் எதிர்கொள்ளும் குறைகளை தீர்க்கவும் ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். இதற்காக தனி இணையதளம் தொடங்க வேண்டும்’’ என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

The post லிவ் இன் ஜோடிகள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம்: ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Separate ,Rajasthan government ,Jaipur ,Rajasthan High Court.… ,Dinakaran ,
× RELATED கருவில் குழந்தைகளின் பாலினம்...