×

டிஎஸ்பியை கொல்ல முயன்றதாக வழக்கு நடிகர் திலீப் முன்ஜாமீன் மனு 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திருவனந்தபுரம் :  நடிகை  பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக  தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 18ம்  தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகை பலாத்கார வழக்கை  விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோஸ் உள்பட போலீசாரை கொல்ல நடிகர் திலீப்  சதி திட்டம் தீட்டியதாக பகீர் தகவல் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் திலீப் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில்  முன்ஜாமீன் கோரி திலீப்  கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது திலீப்  வக்கீல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், விசாரணையை 17ம் தேதி தள்ளிவைக்க  கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 14ம் தேதி விசாரிக்கப்படும்  என்றும், அதுவரை திலீப்பை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.அதன்படி  நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி கோபிநாத், திலீப்புக்கு எதிராக  டைரக்டர் பாலச்சந்திர குமார் அளித்த வாக்குமூலத்தின் முழு விவரத்தையும்  பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எனவே,  முன்ஜாமீன் மனு விசாரணையை 18ம் தேதி  தள்ளிவைப்பதாக சொன்னார். அதுவரை திலீப்பை கைது செய்ய மாட்டோம் என்று  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நடிகை பலாத்கார  காட்சிகள் போலீசிடம் இருப்பதாகவும், அந்த காட்சிகளை போலீசார் துஷ்பிரயோகம்  செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீசுக்கு  உத்தரவிட வேண்டும் என்றும் திலீப் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். இந்த மனு 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது….

The post டிஎஸ்பியை கொல்ல முயன்றதாக வழக்கு நடிகர் திலீப் முன்ஜாமீன் மனு 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Dilip Munjameen ,Thiruvananthapuram ,Dileep ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?